Rules|Contact Us|Register|Home
 

 

 
Sort news by: Date | Popularity | Attendance | Commentaries | Alphabet

நான் இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் -சானியாமிர்சா

Author: admin at 5-11-2012, 15:49
நான் இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் -சானியாமிர்சா

நான் ஓய்வு குறித்து சிந்திக்க வில்லை. இன்னமும் ஆட்டத்தை ரசித்து ஆடுகிறேன் என்று டென்னிஸ் நட்சத்திர வீராங் கனையான சானியா மிர்சா தெரிவித் தார். ஐதராபாத் நகரில் வால்க் பார் பிட்னஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சானியா மிர்சா மேற்கண்ட வாறு கூறினார். மேலும், விளையாட்டும் உடற்தகுதியு ம் பள்ளி பாடத்துடன் ஒருங்கிணைந்த திட்டமாக இருக்க வேண்டும் என்பதை யும் அவர் வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவதே லட்சியம்

Author: admin at 4-11-2012, 05:45
முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குவதே லட்சியம்

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி கழக பணிகள் மற்றும் மக்கள் பணிகள் ஆற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் தாம்பரம் காவல் நிலையம் அருகே உள்ள பேபி உயர்நிலைப்பள்ளியில் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. கூட்டத்துக்கு தமிழக கால்நடைத்துறை அமைச்சரும், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டி.கே.எம்.சின்னையா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், மொளச்சூர் இரா.பெருமாள், ப.தன்சிங், எஸ்.வேதாச்சலம், சென்னை மாநகர துணை மேயர் பெஞ்சமின், மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரூ.206.83 கோடி இழப்பை அரசுசே ஏற்கும்: முதல்வர்

Author: admin at 4-11-2012, 05:44
ரூ.206.83 கோடி இழப்பை அரசுசே ஏற்கும்: முதல்வர்

டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் செலவாக ரூ.206.83 கோடி ஏற்பட்டுள்ளது என்றும், அதையொட்டி பஸ் கட்டணத்தை ஏற்றி பொதுமக்களுக்கு மேலும் சுமையை உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அத்தொகையை அரசே ஏற்றுக்கொள்கிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்

Author: admin at 4-11-2012, 05:42
தமிழக சட்டசபையில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டசபையில் நேற்று முன்தினம் 23 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் ஒய்வு பெறும் வயதை 64 லிருந்து 70 ஆக உயர்த்துவது, கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்துவதற்கு தனி ஆணையம் புதிய உறுப்பினர்களை சேர்க்க கூட்டுறவு தனி ஆணையம், புதிய உறுப்பினர்களை சேர்க்க கூட்டுறவு சங்க பொதுக் குழுவுக்கு அதிகாரம்,

அடுத்து ஆட்சியை மாநில கட்சிகளே தீர்மானிக்கும்: வைகோ

Author: admin at 4-11-2012, 05:40
அடுத்து ஆட்சியை மாநில கட்சிகளே தீர்மானிக்கும்: வைகோ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தா சென்று சந்தித்துப் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அடுத்த மத்திய ஆட்சியை மாநிலக் கட்சிகளே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு நேற்று முன்தினம் சென்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அங்கு முதல்வர் மம்தாவை சந்தித்துப் பேசினார்.

ரூ.800 கோடி மதிப்பிலான பங்குகள் ஏலம் மூலம் விற்பனை

Author: admin at 4-11-2012, 05:39
ரூ.800 கோடி மதிப்பிலான பங்குகள் ஏலம் மூலம் விற்பனை

ரூ.800 கோடி அளவிலான பங்குகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்

Author: admin at 4-11-2012, 05:37
தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பெரிஸிடம் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார். இந்திய பெருங்கடல் நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் 19 வது கூட்டம் அரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்றது.

ராணுவ ரகசியங்கள் விற்பனை: அன்சாரிக்கு காவல் நீட்டிப்பு

Author: admin at 4-11-2012, 05:36
ராணுவ ரகசியங்கள் விற்பனை: அன்சாரிக்கு காவல் நீட்டிப்பு

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்க முயன்றதாக கைதான தமீம் அன்சாரியின் நீதிமன்ற காவல் வரும் 9 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த தமீம் அன்சாரி கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி இலங்கை செல்ல முயன்ற போது திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சி.டி மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்த போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம், கடலோர பாதுகாப்பு ஏற்பாடுகள், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கப்பல் ஊழியர்கள் இறந்தது எப்படி? அதிகாரிகள் விசாரணை

Author: admin at 4-11-2012, 05:34
கப்பல் ஊழியர்கள் இறந்தது எப்படி? அதிகாரிகள் விசாரணை

சென்னையில் தரை தட்டிய கப்பல் ஊழியர்கள் இறந்தது எப்படி? என்று கப்பல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீலம் புயல் தாக்கியபோது சென்னை பட்டினப்பாக்கம் அருகே பிரதீபா காவேரி என்ற எண்ணை கப்பல் தரை தட்டி விபத்துக்குள்ளானது. அதில் இருந்த என்ஜினீயர்கள் கப்பலில் இருந்து படகில் குதித்து உயிர் தப்ப முயன்றனர்.

ரத்தான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது

Author: admin at 4-11-2012, 05:33
ரத்தான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது

வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு இன்று மீண்டும் நடக்கிறது. கண்காணிப்பு பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம்..!

Author: admin at 4-11-2012, 05:32
விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம்..!

செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சம்பளம் போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் ஈடுப்பட்டனர். சமீபத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்த போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்டனர். அப்போது விஜயகாந்துக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாராளுமன்றம் வரும் 22-ல் கூடுகிறது

Author: admin at 4-11-2012, 05:30
பாராளுமன்றம் வரும் 22-ல் கூடுகிறது

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இம்மாதம் 22 ம் தேதி தொடங்குகிறது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சி.ஏ.ஜி. சமர்ப்பித்த அறிக்கை காரணமாக பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. இந்நிலையில் மக்களவை செயலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 15 வது மக்களவையின் 12 வது கூட்டத் தொடரான குளிர்கால கூட்டத் தொடர் வரும் 22 ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20 ல் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகிங் பல்கலை.,யில் பாடம் நடத்த கலாமுக்கு அழைப்பு

Author: admin at 4-11-2012, 05:29
பீகிங் பல்கலை.,யில் பாடம் நடத்த கலாமுக்கு அழைப்பு

பீகிங் பல்கலைக்கழகத்தில் வந்து பாடம் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதன்முறையாக சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழக தலைவர் ஜு ஷான்லு கலாமை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார்.

ஒபாமா அதிபரானால் இ. தமிழர்களுக்கு மாற்றம் வருமா?

Author: admin at 4-11-2012, 05:27
ஒபாமா அதிபரானால் இ. தமிழர்களுக்கு மாற்றம் வருமா?

மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தால் இலங்கை விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்குரிய வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

சட்டப் பேரவை விழா அழைப்பு: ஜனாதிபதி - கவர்னர் ஏற்பு

Author: admin at 2-11-2012, 17:40
சட்டப் பேரவை விழா அழைப்பு: ஜனாதிபதி - கவர்னர் ஏற்பு

நவம்பர் 30 -ம் தேதி நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டப் பேரவையின் வைர விழாவில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இசைவு தெரிவித்துள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப் பேரவையில் தெரிவித்தார். சட்டப் பேரவையில் நேற்று விதியின் 110 -ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

36,855 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: முதல்வர்

Author: admin at 2-11-2012, 17:39
36,855 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: முதல்வர்

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கின்ற மொத்த உற்பத்தி வளர்ச்சியைக் காட்டிலும் தமிழகத்தில் 20 சதவிகிதம் உற்பத்தி வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில், 20,925 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யவும் அதன்மூலம் 36,855 பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு பெறவும் ஏதுவாக 12 நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.

விஜயாகாந்திற்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின்

Author: admin at 2-11-2012, 17:37
விஜயாகாந்திற்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின்

சென்னை விமான நிலையத்தில் விஜயாகாந்திடம் தொலைகாட்சி நிருபர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் சந்தித்ததை குறித்து கேள்வி எழுப்பினர். அப்பொழுது தொலைகாட்சி மூத்த நிருபருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கீழே தள்ளபட்டனர். இதையொட்டி விஜயகாந்த் மீது ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் ஜாமீன் கோரினார். அவருக்கு நேற்று முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய - அமெரிக்கர்களின் வாக்குகளை சேர்க்க தீவிரம்

Author: admin at 2-11-2012, 17:34
இந்திய - அமெரிக்கர்களின் வாக்குகளை சேர்க்க தீவிரம்

இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக சேர்க்க ஒபாமாவும், ரோம்னியும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் தங்களது தீவிரப் பிரசாரத்தை மீண்டும் முடுக்கி விட்டுள்ளனர். சாண்டி புயல் காரணமாக இருவரின் தேர்தல் பிரசாரமும் சற்றே பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சச்சின் - கோலியை கவுரவப்படுத்த பி.சி.சி.ஐ. முடிவு

Author: admin at 2-11-2012, 17:32
சச்சின் - கோலியை கவுரவப்படுத்த பி.சி.சி.ஐ. முடிவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு பாராட்டும், விராட் கோலிக்கு விருதும் வழங்கி கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பி.சி.சி.ஐ. விருது வழங்கும் விழா மும்பையில் வரும் 21 ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவில் கிரிக்கெட்டில் சாதனை புரிந்தவர்கள் கவுரவப்படுத்தப்படுவர்.

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை பணம் உயர்வு

Author: admin at 2-11-2012, 17:30
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை பணம் உயர்வு

25 ஆண்டுகாலம் அரசு பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ரொக்கத்தொகை 500-லிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன் அவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். மேலும் அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Go to Top
 

Blazzegames.com